“திருப்பதி பாலாஜி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு ப்ரசாதத்தில் உள்ள விலங்கு கொழுப்பு – காங்கிரஸ் கட்சியின் சதி” என்ற தலைப்பில் நியூஸ் 18 ராஜஸ்தான் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.
இதுகுறித்து, செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிலைகள் ஆணையம் (NBDSA)-யிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏழு நாட்களுக்குள் அனைத்து தளங்களிலிருந்தும் அதனை நீக்க NBDSA உத்தரவிட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்த NBDSA நிகழ்ச்சி தயாரிப்பாளரின் நோக்கம் சனாதன தர்மத்தை பற்றியதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக இருந்ததை உணர்ந்தனர்.
நெய் கலப்படம் குறித்து அந்த நிகழ்ச்சியில் பெரிதாக கேள்வி எழுப்பப்பட்டதாகவோ அதுகுறித்து அறிவியல்பூர்வமான விவாதம் நடந்ததாகவோ தெரியவில்லை என்று NBDSA விடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த செய்தியை அனைத்து தளங்களில் இருந்து ஒரு வார காலத்திற்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.