நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை 444 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லர் 18,074 ரன்கள் எடுத்துள்ளார்.

ஜனவரி 1 ம் தேதி துவங்க இருக்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் டெய்லர் நியூஸிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை டேனியல் வெட்டோரி-யுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெரும் டெய்லர் பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார்.

ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் பின்பு மார்ச் மாதம் நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடும் ரோஸ் டெய்லர், அதன் பின் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்.