நியூயார்க்:

நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், புதிதாக 335 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நியூரர்க்கில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 638-ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 106-ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ, “ஒவ்வொரு நாளும், இன்று கொரோனா பாதிப்பு முடிவடைந்து விடும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறாது” என்று அவர் கூறினார். கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும், இந்த் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் அதிகரித்ஹ்டுக் கொண்டே வருகிற்து என்றும் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் தகவல்களையும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை மேம்படுத்து குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நடவடிக்கைகள் இந்த மாத தொடக்கம் முதலே மேம்பட்டு வந்தது. ஆனாலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் நிலை மோசமடைந்தது.

நியூயார்க் மக்கள் அனைவரும், முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். மேலும் உடற்பயிற்சிக்காக அல்லது மளிகை கடை அல்லது மருத்துவ பராமரிப்பு போன்ற தவறுகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். சமூக, மத மற்றும் பிற கூட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளர்.