நியுயார்க்:
அமெரிக்காவில் முழுக்க முழுக்க தங்கத்தினாலான கழிப்பறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளியல் மற்றும் கழிவறைகள் ஒன்றில் இந்த தங்க கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
கழிப்பறையில் சாதாரண பீங்கானால் செய்யப்பட்ட கழிப்பறை இருக்கை இருந்த இடத்தில் இப்போது இந்த தங்க கழிப்பிட இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் மிலன் நகரில் வசிக்கும் உலோகக் கலைஞரான கேட்டலான், இந்த தங்க கழிப்பறை இருக்கையை வடிவமைத்துள்ளார்.
அருங்காட்சியகத்துக்குள் வர நுழைவுக் கட்டணம் செலுத்தும் எவரும் இந்தக் கழிப்பறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
“ உலக மக்கள் தொகையில் “ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு அசாதாரணமான ஆடம்பரப் பொருளை (தங்கம்) அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படி செய்யும் நோக்கித்தில் இந்த தங்க கழிப்பறை செய்யப்பட்டது” , என்று அருங்காட்சியக நிர்வாகம் தெரிவிக்கிறது.
Source: http://www.bbc.com/news/world-us-canada-37370109