சென்னை: புத்தாண்டு பரிசாக தங்கம் விலை இன்று (ஜனவரி 1) அதிடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. நேற்று விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்து உள்ளது.
நடுத்தர சாமானிய மக்களின் நிதி சேமிப்பாக இருக்கும் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சமீப காலமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில், உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
புத்தாண்டு தினமான இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை 2024ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ந்தேதி அன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.56,880-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், 2025-ம் ஆண்டின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.