சேலம்:

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி  சேலம் மாவட்டத்தில் மட்டூம் ரூ.5 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டை ரூ.1 கோடி அளவுக்கு அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு உலகம் முழுவதும் புத்தாண்டு பிறப்பு கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திலும் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுத்து வந்தனர். டிசம்பர் 31ந்தேதி மதியம் முதலே கடைகளில் கூட்டம் அலைமோயது. தங்களுக்கு பிடித்தமான மது வகைகளை வாங்கி வைத்துக்கொண்ட அவர்கள், நள்ளிரவு புத்தாண்டு தொடக்கத்தின்போது  மது உண்டு ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர்.

இந்த நிலையிலி சேலத்தில் மட்டும் ரூ.5 கோடி அளவிலான மது விற்பனையாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சேலம் மாவட்டத்தில் 204 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் வழக்கமான விற்பனையை விட புத்தாண்டு காரணமாக டிசம்பர் 31ந்தேதி மது விற்பனை அமோகமாக நடைபெற்றதாகவும், அன்றைய தினம்  ஒரே நாளில் மட்டும்  9 ஆயிரத்து 204 பெட்டி பிராந்தியும்,  6 ஆயிரத்து 401 பெட்டி பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

இதன் மதிப்பு ரூ.5 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரத்து 420  என்று அறிவித்து உள்ளனர். இது கடந்த ஆண்டை விட  ரூ.99 லட்சத்து 84 ஆயிரத்து 308 அதாவது சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு அதிகம் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் மது விற்பனை இவ்வளவு என்றால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மது விற்பனை எவ்வளவு இருந்திருக்கும்…

தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை தமிழக இளைஞர்களை குடிகாரர்களாக மாற்றி வருவது வேதனைக்குரியது…