சென்னை: புத்தாண்டு முதல் கூட்டத்தொடரையொட்டி, தமிழக சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன. 6 ஆம் தேதி தொடங்க இருப்பதாக ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாடுஅரசு கொடுக்கும் அறிக்கையை, ஆளுநர் வாசிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று சபாநாயகர் அப்பாவு, கிண்டியில் உள்ள ராஜ்பவன் சென்று, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து அழைப்புவிடுத்தார்.
அப்பேதாது, தமிழக சட்டப்பேரவையின் 2025ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜன. 6 ஆம் தேதி திங்கள்கிழமை, காலை 9.30 மணிக்கு கூட இருப்பதால், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அழைப்பு விடுத்த்தார்.
முன்னதாக கடந்த டிச. 9-ஆம் தேதி இரண்டு நாள்கள் சட்டப்பேரவை கூடிய நிலையில், ஜனவரி 6ஆம் தேதி இநத் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.