அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு போனஸ்: 7 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு

Must read

சென்னை,
மிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளித்து முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் முதல் இது அமலுக்கு வருகிறது. கடந்த 5 மாதத்திற்கான அகவிலைப்படி அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி 125 சதவிகிதமாக இருந்தது. தற்போது 7 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால்,  தற்போது 132 சதவிகிதமாகிறது.
இந்த மாத ஊதியத்துடன் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு 427 ரூபாய் முதல் 5,390 ரூபாய் வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 214 ரூபாய் முதல் 2,695 ரூபாய் வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.
அரசின் அறிவிப்பால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
அகவில்லைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதல் செலவு 1,833 கோடியே 33 லட்சம் தேராயமாக இருக்கும் என்று முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article