டில்லி,

ஜிஎஸ்டி குறித்த மக்களின் சந்தேங்களை போக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு புதிய வெப் சைட்டுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மாநில மொழிகளில் விவரங்கள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி என்ற புதிய வகையான வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிற்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்ததைப்போல,  ஜுஎஸ்டியும் நேற்று நள்ளிரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறித்து பல்வேறு வகையாக கருத்துக்கள் நிலவி வருவதால்,  பொதுமக்கள் மட்டுமின்றி வணிகர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

இதன் காரணமாக  மக்களின் சந்தேகங்களை தீர்க்க மத்திய அரசி பிரத்யேக வெப் சைட்டை உருவாக்கி உள்ளது.

இந்த வலைதளத்திற்குள் சென்று சந்தேகங்களை தீர்த்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

http://www.cbec.gov.in/htdocs-cbec/gst

ஆனால், இந்த வெட்பசைட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் உள்ளதால், ஆங்கிலம் தெரியாத மாநில மொழி மக்கள் இநத வலைதளத்தால் எந்தவித உபயோகமும் இல்லை என்று கூறி வருகிறார்கள்.

எனவே, மாநில மொழியிலும் வலைதளம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.