சென்னை:
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்து ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் பார்த்தசாரதி துணை வேந்தராக புநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்திற்கு கே.பார்த்தசாரதி துணைவேந்தராக நியமிக்கப்பட்டு cள்ளார். இவரது பணிக்காலம் 3 ஆண்டுகள். இவர் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் 22 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆண்ட்ரோஜி துறையில் தனித்துவம் கொண்டவர். பாரதிதாசன் பல்கலைகழகத்தில் துறை தலைவர், டீன், இயக்குனர் என 23 வருடங்கள் நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவர். அனைத்து பல்கலைகழகங்களிலும் பார்த்தசாரதி மிகவும் பிரபலமானவர்.
கிராமபுற தொழில்நுட்பம், எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் 177 படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளார். 17 பி.எச்.டி மாணவர்கள், 24 ஆராய்ச்சி, 8 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். மேலும் பல்கலைகழகங்களில் பல அனுபவங்களை கொண்டவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.