சென்னை: விழுப்புரத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கும் வகையிலான  சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்  மற்றும்  எடப்பாடி அரசின் கடைசி கூட்டத்தொடருமான, நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இனறு முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையில், ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்திருந்தபடி,  வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி இன்று  விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்க சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே திருவள்ளுவர்  பல்கலைக்கழகத்தை பிரித்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றும் விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி,கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் ஜெயலலிதா பல்கலைக்கழகம் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.