லண்டன்: இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக்கிற்கு உகரைன் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவரிடம் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என ரிஷி சுனக் உறுதி அளித்தார்.

இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை முறைப்படி இங்கிலாந்தின் புதிய பிரதமராக அரசர் 3-ம் சார்லஸ் அறிவித்தார். இதையடுத்து ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக நேற்று (அக்டோபர் 25ந்தேதி) பதவி ஏற்றார். அந்நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஐ சந்தித்த பின்பு பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன்  உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் தனது முதல் உரையின் போது, “நான் தவறுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்டேன். நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன்” என்று கூறினார். இதையடுத்து ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் ரஷியாவுடனான போரில், உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்ததாக இங்கிலாந்து பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]