பெங்களூர்: இந்தியாவிலேயே முதன்முதலாக பயோ எத்தனால் எரிபொருளில் ஓடக்கூடிய TVS Apache RTR 200 FI E100 வகையான பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மராட்டியம், உத்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே கிடைக்கப்பெறும் இந்த பைக்கின் விலை ரூ.1.20 லட்சம்.
பிற வழக்கமான RTR 4V பைக்குகளைவிட இதன்விலை சுமார் ரூ.8000 முதல் ரூ.9000 வரை அதிகம். பயோ எத்தனால் எரிபொருள் பற்றாக்குறை காரணத்தால்தான் தற்போது 3 மாநிலங்களில் மட்டுமே இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில், இந்த எரிபொருள் இந்தியாவில் சரளமாக கிடைப்பதில்லை. அதேசமயம், பயோ எத்தனால் பரவலாக கிடைக்கத் தொடங்கியவுடன் பிற மாநிலங்களிலும் இதை அறிமுகம் செய்ய டிவிஎஸ் முடிவு செய்துள்ளது.
இந்த பைக்கின் வடிவமைப்பு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 200 சிசி இன்ஜின் மற்றும் எரிபொருள் இன்ஜெக்ஷன் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த எரிபொருள் 20.6 குதிரை சக்தியை உற்பத்தி செய்கிறது. வழக்கமான எரிபொருளில் 20.2 குதிரை சக்தி அளவிற்கே உற்பத்தி செய்யப்படும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.