சென்னை:
மிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க கோரி விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. இந்த மாதம் இறுதியில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகளுகான கல்வி கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 31ந்தேதி உடன் முடிவடைந்த நிலையில், தற்போது,  கட்டண நிர்ணய குழு அவகாசத்தை ஜூன் 15 வரை நீட்டித்துள்ளது.
விண்ணப்பங்களை ஆய்வு செய்து வரும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக புதிய கட்டண விபரங்கள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.