அமராவதி:
ஆந்திராவில் புதிதாக திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போதுள்ள பிரபலமான திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் தெலுங்கானாவுக்கு சென்று விட்டது. இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் போன்றே புதிய கோவில் கட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்பினார். அதற்கான இடம் ஆந்திர தலைநகர் அமராவதியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவில் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோவில் கன்னியாகுமரியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு சமீபத்தில் கும்பாபிசேனம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய கோயில் ஒன்று பிரமாண்டமாக 25 ஏக்கர் நிலப்பரப்பில் 150 கோடி ரூபாய் செலவில் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அப்போது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் வேங்கடேசப் பெருமாள் கோயில் பொதுமக்கள் பிரார்த்தனைக்குத் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து விழாவின் ஒரு பகுதியாக சீனிவாச கல்யாணம் மகோத்ஸவமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், திருப்பதி சேவகர்கள், எனப் பல்லாயிரக்கணக்கான பேர்கள் கலந்து கொண்டனர்.