கொரோனா உள்பட காற்றில் பரவும் பிற தொற்று நோய்க்கிருமிகளை அழிக்கும் புதிய தொழில் நுட்பத்தை அமெரிக்கத்தமிழர் கண்டுபிடித்துள்ளதார். அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள DOKAT,Inc எனும் உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) உற்பத்தி நிறுவனம் புதிதாக Dokat Air எனும் ஆழ்சக்தி புறஊதா (UV-C) கதிர் திறன் கொண்ட காற்று சுத்திகரிப்பானை (Air Sanitizer ) கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் CEO ராம் செல்லா (https://www.linkedin.com/in/
காப்புரிமைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தினால் மற்ற காற்று சுத்திகரிப்பான் களைக் காட்டிலும் மிகுந்த ஆற்றலுடன் நோய்க்கிருமிகளை காற்றில் இருந்து முழுவதுமாக கொல்லக்கூடிய திறன் Dokat Air sanitizer-க்கு உள்ளது. இச்சாதனம் முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்படுவது கூடுதல் சிறப்பு.
DOKAT ஆராய்ச்சி குழுவினரிடம் 22 காப்புரிமங்கள் உள்ளன. அவர்கள் கண்டுபிடிப்புகளில் ஆழ்சக்தி புறஊதா(Deep UV-C) புதிதாக சேர்ந்துள்ளது. இக்குழுவினரின் கடின உழைப்பினாலும் தொடர் முயற்சியினாலும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் தர ஆய்வு சோதனைகளில் வெற்றிபெற்றுள்ளனர். ISO 9000 :2015 , CE (ஐரோப்பிய ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் தர சான்று) மற்றும் FCC (அமெரிக்காவின் மின்னணு சாதனங்களுக்கான தர ஆய்வு சான்று) உள்ளிட்ட சர்வதேச சான்றுகளை DOKAT Air பெற்றுள்ளது.
DOKAT Air தொழில்நுட்பத்தை ராம் செல்லா விளக்கும் காணொளி இணைப்பு https://youtu.be/aXs_f8PW6sg
கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பரவுவதற்கான ஆபத்து திறந்த வெளிகளைக் காட்டிலும் கட்டிடடங்களின் உட்புறத்தில் இருக்கும் காற்றில் மிக அதிகம். கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள், வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மீண்டும் திறக்கப்படுவதில் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது. பொருளாதார முடக்கம் அச்சுறுத்துவதாக உள்ளது. எனவே சமூக இடைவெளி, முக கவசங்களை தாண்டியும் நாம் சுவாசிக்கும் காற்றில் மிதக்கும் தொற்றுநோய் கிருமிகளை சுத்திகரிக்க பிரத்தியேகமாக நிருபிக்கப்பட்ட தொழில்நுட்பம் அவசியமாகிறது.
இந்த பாதுகாப்பு தேவையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதுதான் DOKAT Air எனும் இந்த காற்று சுத்திகரிப்பான். பிற சுத்திகரிப்பான்கள் காற்றில் இருக்கும் தூசு போன்ற மாசுகளை மட்டும் நீக்குகின்றன. கொரோனா போன்ற தொற்று நோய் கிருமிகளை அழிப்பதில்லை. HVAC மற்றும் AC குளிர்சாதனங்களும் காற்றில் இருக்கும் கிருமிகளை கொல்வதில்லை மாறாக அவை பரவுவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. எனவே உட்புற காற்றில் இருக்கும் நோய்க்கிருமிகளை அழிப்பதற்கு பிரத்தியேகமான சாதனங்கள் தேவை. இதற்கு விடையாக DOKAT Air கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது பாக்டீரியா, பூஞ்சை, கொரோனா வகை வைரஸ் என அனைத்து வகையான நோய்க்கிருமிகளை மற்ற சாதனங்களை காட்டிலும் முற்றிலுமாக காற்றிலிருந்து கொன்று அகற்றிவிடுகிறது. 1000 கண அடிகொண்ட அறையில் 99.99% கிருமிகளை 15 நிமிடங்களில் அழித்துவிடுகிறது.
அமெரிக்காவின் CDC (Centers for Disease Control and Prevention) அமைப்பு புறஊதா கதிர் திறன் கொண்ட உபகரணங்களை கொரோனா காலத்தில் கிருமிக்கொல்லியாக பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் பலவும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அணியும் N95 வகை முகக்கவசங்களை சுத்திகரிக்க புறஊதாக் கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
புறஊதா கதிர் தொழிநுட்பம் நுண்கிருமிக்கொல்லியாக மருத்துவத்துறையில் பலகாலங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. UV கதிர்கள் நுண்கிருமிகளை கொல்லும் என்பது அனைவரும் அறிந்ததே. இவை கொரோனா வைரஸ் கிருமியையும் கொல்லும் என்பதை Dr . டேவிட் பிரென்னேர், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கதிரியக்கவியல் துறை இயக்குனர் கண்டுபிடித்துள்ளார். நியூயார்க் மெட்ரா இவரது கண்டுபிடிப்பை கொண்டு ரயில்களை சுத்திகரிக்க பயன்படுத்திக் காட்டியுள்ளனர்.
புறஊதாக் கதிர் நேரடியாக மனிதர்கள் பயன்படுத்த உகந்தது அல்ல. எனவே Dokat Air போன்ற காற்று மற்றும் நீர் சுத்திகரிப்பான்களில் முழுவதுமாக அடைக்கப்பட்ட உள்குடுவைக்குள்ளாக மட்டுமே புறஊதா தொழில்நுட்பம் செயல்படுவதால் இவை மனிதர்கள் இருக்கும் இடங்களில் பயன்படுத்த முற்றிலும் பாதுகாப்பானது.
மற்ற சுத்திகரிப்பான்கள் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தில் மட்டும் செயல்படும், Dokat நிறுவனத்தின் கண்டுபிடிப்பான ஆழ்சக்தி புறஊதா (Deep UV-C) கதிர் திறன் பல அலைநீளங்களின் சக்திகளை ஒரே விளக்கில் கொண்டுவரும் ஆற்றல் கொண்டது. எனவே இதன் நுண்கிருமிக்கொல்லி திறன் பன்மடங்கு அதிகரிக்கிறது. காற்றின் மூலமாக பரவும் அனைத்து கிருமிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது, Dokat Air. 100 சதுர அடிகொண்ட அறையை 15 நிமிடத்தில் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
இன்றைய காலகட்டத்தில் இதன் தேவையை உணர்ந்த மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது தயாரிப்பை வாங்கிவருவதாக Dokat நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வடிவமைப்பட்ட தொழிலநுட்பத்தை பயன்படுத்தி முழுவதுமாக இந்தியாவில் DOKAT Air sanitizer -ஐ தயாரித்திருப்பது தனக்கு மிகுந்த மனநிறைவை தருவதாக தெரிவித்தார் தமிழரான, ராம் செல்லா.
DOKAT Air சிறப்பம்சங்கள் :
அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
ஆழ்சக்தி புறஊதா (UV-C) தொழில்நுட்பம் முந்தைய புறஊதா தொழில்நுட்பத்தைக்காட்டிலும் திறன் மிக்கது.
99.99% காற்றில் பரவும் கொரோனா வகை வைரஸ் உட்பட்ட அனைத்து நோய்க்கிருமிகளை கொல்லக் கூடியது.
100% பாதுகாப்பானது, புற ஊதா கசிவு முற்றிலும் கிடையாது. மக்கள் இருக்கும் இடங்களில் பயன்படுத் தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சத்தம் (noise) இன்றி இயங்கக்கூடியது.
Installation தேவை இல்லை, மேசை காற்றாடி போன்று plug-இல் பொருத்தினால் போதும்.
மேலும் விவரங்களுக்கு Website: https://dokat.ai/
– செல்வமுரளி