லண்டன்: உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உருமாறிய நிலையிலும் கொரோனா பரவி வருகிறது. இதுபோன்ற வைரஸ்கள், இடத்துக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்கிறது. இதனால், அதை கட்டுப்படுத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
சமீப காலமாக இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா பல நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இடத்துக்கு தகுந்தாற்போல தனது வீரியத்தை அதிகரித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தது. .அதுபோலவே கொரோனா வைரசும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் உருமாறி பரவி வரும் நிலையில்,.இந்தியாவி லும் உருமாறிய நிலையில் பரவி வருகிறது.சில பகுதிகளில் புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளன. இந்த தொற்று பரவலில் இருந்தும் தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் பாதுகாக்கும் என கூறப்பபட்டுள்ளது.
புதிதாக பரவி வரும் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வகையான அறிகுறிகள் தென்படுகின்றன. அதன்படி,
.
உருமாறிய வைரஸ்கள் வாய் பகுதிக்குள் எளிதாக தொற்றி பற்குழி, பல் இடுக்கு, நாக்கு பகுதி, தொண்டையில் இருந்து பல்கி பெருகுகின்றன.
இதன் பாதிப்பு காரணமாக, வாய் துர்நாற்றம், வாய்ப்புண், தாடை பகுதியில் எரிச்சல், தொண்டைப்புண், நாக்கில் வீக்கம், வெடிப்பு, நாவறட்சி, வாய் உலர்தல், எச்சில் உற்பத்தி குறைவு, அலர்ஜி , உடல் சோர்வு, தலை சுற்றல், உடல் வலி ஏற்படலாம்.
மேலும், உடல் பலவீனப்படுதல், தடுமாற்றம், அதிக தாகம், குமட்டல், உடல்வலி, தசையில் ஒருவித வலி, உடல் வீக்கம், தசை எரிச்சல், மூட்டுவலி, திடீர் வயிற்றுப்போக்கு, சோம்பல் போன்ற அறிகுறிகள் தென்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற அறிகுறிகள் தென்படும் நபர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.