டில்லி:

யில்  பயணக் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையில் புதிய முறையை அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து ரயில்வே செய்தித்தொடர்பாளர் அனில் சக்சேனா தெரிவித்ததாவது:

“தற்போது, ரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ஆணாக இருந்தால், 40 சதவீத சலுகையும், பெண்ணாக இருந்தால் 50 சதவீத சலுகையும் அளிக்கப்படுகிறது.

இந்த சலுகையால், ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, இதில் புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி, மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, கட்டணத்தில் பாதி சலுகை வேண்டுமா? முழு சலுகை வேண்டுமா? என்று கேட்கப்படும்.

இதற்கு மூத்த குடிமக்கள் அளிக்கும் பதிலை பொறுத்து, கட்டண சலுகை அளிக்கப்படும். அதில் அவர்கள் விருப்பமானதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

கட்டணத்தில் தங்களுக்கு வழங்கப்படும் சலுகையை விரும்பாதவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ரயில்வே துறையின் நிதிச் சுமையைக் குறைக்க முன்வரலாம். இதனால் மூலம் ரயில்வேயின் இழப்பு குறையும்.

டிக்கெட் வழங்கும் சாப்ட்வேரை தரம் உயர்த்தும் பணி முடிந்த பிறகு, இந்த புதிய முறை அமலுக்கு வுரும்” என்று அவர் தெரிவித்தார்.