கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதாக ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.
புதிய விதிமுறைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிரிக்கெட் போட்டியின் போது ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடும் வீரர் மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேற்றப்படுவார்.
வீரர்கள் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டால் தொடர் முழுவதும் விளையாட தடை.
ஐசிசியின் புதிய விதிப்படி டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 80 ஓவருக்கு மேல் டிஆர்ஸ் கேட்க முடியாது.
நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அமல்படுத்தப்படும்.
இந்த புதிய விதிமுறைகள் இந்த மாதம் (செப்டம்பர்) 28 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஆர்எஸ் முறை தற்போதுதான் முதன்முறையாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்ப டுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.