பிரதமர் நரேந்திரமோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன், மக்களிடையே ஏற்பட்ட பதற்றத்திற்கு தீர்வுகானும் முகமாக, இன்று டெல்லி, மும்பை, போபால் ஆகிய நகரங்களில் ஏ.டி.எம். மற்றும் வங்கிகளில் 500 ரூபாய் விநியோகம் தொடங்கியது.
o
பழைய 500,1000 ரூபாயை செல்லாது என்று அறவித்த மத்திய அரசு, புதிய 2000 ரூபாயை அறிமுகப்படுத்தியது. ஆனால் புதிய நோட்டோ, 100, 50 ரூபாய்களோ கிடைக்காமல் மக்கள் திணறிவருகிறார்கள்.
இந்த நிலையில் பதற்றத்தை தீர்க்கும் ஒரு முயற்சியாக,  விரைவில்  அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்த  புதிய 500  ரூபாய் நோட்டை இன்றே டில்லி, மும்மை, போபால் நகரங்களில் அரசு அறிமுகப்படுத்தியது.
ஆனால் இன்னமும் பெரும்பாலோனோர் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.