சினிமா துறை ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப். யாஷ் நடித்திருந்த இந்த படத்திற்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த படம் கன்னடா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் ஈட்டியது.
முதன் முறையாக 100 கோடி வசூல் ஈட்டி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு சிறந்த சண்டை காட்சி மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டிற்கான தேசிய விருது பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது உருவாகி வருகிறது.கொரோனா ஊரடங்கினால் இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த படத்தின் முக்கிய வில்லனான ஆதிரா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் யாஷ் சில தினங்களுக்கு முன் கலந்துகொண்டார்.தற்போது இந்த படத்தின் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு புதிய போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.