புதுடெல்லி:
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் (மே 28) திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் நேற்று பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இதனை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய விடுமுறைக் காலஅமர்வு இன்று அவசர வழக்காக விசாரணை மேற்கொண்டது.
வழக்கு விசாரணையில் மனுதாரரின் வாதங்களில் திருப்தி அடையாத நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்யும் முடிவுக்கு வந்தனர். அப்போது மனு தாரர், ‘தள்ளுபடி செய்துவிட வேண்டாம். நானே வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்’ என்று அனுமதி கோரி பொதுநல வழக்கை வாபஸ் பெற்றார்.