நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் “தராசு” ஷ்யாம் (Shyam Shanmugaam) அவர்களின் முகநூல் பதிவு:
“புது நோட்டு அச்சடிக்கும் பணி ஆறு மாதம் ஒரு வருடத்திற்கு முன்னர் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், புது ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்தே உள்ளது. இவர் கவர்னராக பொறுப்பேற்றதே செப் 4 , 2016. அதாவது சுமார் 65 நாட்களுக்கு முன்புதான்,
அதற்கு முன்புவரை கவர்னர் பொறுப்பில் இருந்தவர் ரகுராம் ராஜன்.
புது நோட்டு அச்சடிக்கும் பணி ஆறு மாதம், ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கியிருந்தால் ரகுராம் ராஜன் கையெழுத்துதானே இருக்க வேண்டும்?
எப்படி அதில் உர்ஜித் கையெழுத்து இருக்கும்?
பாலாஜி, அர்க்கா தேவ் மாதிரியான மேதாவி விற்பன்னர்கள் விளக்கினால் தன்யனாவேன்!”
Top of Form
Bottom of Form