டில்லி
மெரிக்கா மற்றும் சிங்கப்பூருக்கு மேற்கல்விக்காக செல்லும் மாணவர்கள் அந்த நாடுகளின் அனுமதி இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் மேற்கல்வி கற்பதில் இந்திய மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  குறிப்பாக இந்திய மாணவர்கள் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூருக்கு அதிக அளவில் மேற்கல்விக்காக செல்கின்றனர்.  தற்போது இந்தியா, பிலிப்பைன்ஸ், அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் வெளி நாட்டினர் வருவதை தடை செய்துள்ளன.  அதைப் போல் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் மாணவர்கள் வரத் தடை விதிக்கப்படலாம் என ஊடகங்கள் தெரிவித்தன.
ஆனால் தற்போது இந்த இரு நாடுகளும் இந்திய மாணவர்கள் வருவதற்கு விசா விதிகளில் மாறுதல் எதையும் அறிவிக்கவில்லை.  இவர்களுக்கான விசாக்கலாம் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் மாணவர்கள் கலவி கற்கப் போகும் பல்கலைக்கழகம் இவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்னும் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
தற்போது ஏர் இந்தியா இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”மாணவர்களின் விசாக்கலாம் அவர்கள் கிளம்பும் போது ஆறு மாதங்களுக்குக் குறைவாக இருந்தாலும்,  மேலும் இன்னும் எந்த ஒரு கவி நிலையத்திலும் சேராமல் இருந்தாலும் அவர்களுக்குப் பயணிக்க அனுமதி கிடையாது.  அவர்களது விசா ஆறு மாத காலங்களுக்கு அதிகமாகவும் கல்வி பயில பல்கலைக்கழகங்களின் அனுமதியும் அவசியம் தேவை.
படிப்பைத் தொடர அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் செல்ல விரும்பும் மாணவர்கள் அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையம் மேலும் சம்பந்தப்பட்ட நாடுகளின் எழுத்து பூர்வ அனுமதி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் அது இல்லாமல் விசா மட்டும் இருக்கும் மாணவர்கள் விமானம் ஏற அனுமதிக்கப் படமாட்டார்கள்’ எனத் தெரிவித்துள்ளது.