சென்னை
விரைவில் சாலைகளில் புதிய பெயர் பலகைகள் வார்டு எண், மண்டல எண் மற்றும் பிரிவு விவரங்களுடன் ரூ.8 கோடி செலவில் சென்னை மாநகராட்சி அமைக்க உள்ளது.
சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை மாநகராட்சி ஒரு சில பகுதிகளில் சாலைகளில் புதிய பெயர் பலகைகளைச் சோதனை ரீதியாக அமைத்தது. அதில் சாலைகளின் பெயர்களுடன் அந்த வார்டு எண், மண்டல எண், பிரிவு ஆகிய விவரங்கள் இருந்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள முக்கிய தலங்களின் படங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் நகராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் இதைப் போல் புதிய பெயர்ப் பலகைகளை ரூ. 8 கோடி செலவில் அமைக்க திட்டம் இடப்பட்டுள்ளன. இவற்றில் வார்டு எண், மண்டல எண், பிரிவு எண் ஆகியவற்றுடன் முக்கிய தலங்களின் படங்களும் பொறிக்கப்பட உள்ளன.
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள அம்பத்தூர், திருவொற்றியூர், மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள சாலைப் பெயர்ப் பலகைகளில் மண்டலம், மற்றும் பிரிவு எண்கள் இல்லாமல் உள்ளது. புதியதாக அமைக்கப்பட்ட உள்ள பெயர் பலகைகளில் அந்த விவரங்கள் பலகைகளின் வலது பக்கத்தில் மேற்பகுதியில் இடம் பெற உள்ளன.
இது குறித்து சென்னை கே கே நகரில் வசிக்கும் ஆர்வலரான வி கோபாலகிருஷணன் ஏற்கனவே உள்ள சாலைகள் பெயர்ப் பலகைகளில் அரசியல் கட்சிகளும் தனியாரும் சுவரொட்டிகளை ஒட்டி மறைத்து விட்டதாகவும் அதே நிலை புதிய பெயர் பல்கைகலிலும் தொடர்ந்தால் இந்த பலகைகள் வைப்பதில் பயன் இருக்காது என எனத் தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஆர்வலர் பாலாஜி பெயர்ப் பலகைகளில் அதிகபட்சமாக இறப்பு சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் அதைத் தடுக்க இயலவில்லை எனவும் இதனால் முக்கிய தலங்கள் குறித்த விவரங்கள் உள்ள பலகைகளும் பயனற்று போகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பழக்கத்தை நிறுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.