கொரோனா ஊரடங்கினால் திரையரங்கு தொழில் முடங்கியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் தவிர்த்து மற்ற படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கு பக்கம் வருவதில்லை.
தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
திரையரங்குகளை கல்யாண மண்டபமாக்கலாமா, வணிகவளாகமாக மாற்றலாமா அல்லது குடோனாக பயன்படுத்தலாமா என்று திரையரங்கு உரிமையாளர்கள் யோசித்து வரும் இந்த நிலையில் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் பத்தாவதாக ஒன்றை திறந்திருக்கிறார்கள்.
பெங்களூரில் ஐநாக்ஸுக்கு சொந்தமாக ஒன்பது மல்டிபிளக்ஸ்கள் உள்ளன. இந்த கொரோனா காலகட்டத்தில் பத்தாவதாக ஒன்றை திறந்திருக்கிறார்கள். மொத்தம் ஐந்து திரைகள் இந்த புதிய மல்டிபிளக்ஸில் உள்ளன.
இதனால் பெங்களூருவில் உள்ள ஐநாக்ஸ் திரைகளின் எண்ணிக்கை மட்டும் 44 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள சத்யம் குழுமத்தின் திரையரங்குகளை வாங்கிய பின் ஐநாக்ஸின் மல்டிபிளக்ஸ்களின் எண்ணிக்கை பத்தை தாண்டியது. இதற்கு மேலும் கிழக்குக் கடற்கரை சாலையில் புதிய மல்டிபிளக்ஸை திறக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.