‘விமான பயணிகளை’ ’டோண்ட் டச்..’
கொரோனா பரவலைத் தடுக்க, இப்படி ஒரு உத்தரவு, விமான நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமானம் ஏற வரும் பயணிகள் இனிமேல், தங்கள் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களை , அங்குள்ள தொழில் பாதுகாப்புப் படை வீரர்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
விமான நிலையம் வரும் பயணிகள், நேராக விமானத்தின் உள்ளே நான்கு புறமும் கண்ணாடிகளால் மூடப்பட்டிருக்கும் அறையில் சென்று அமர்ந்து கொள்ளலாம்.
அவர்களுக்கு முன்னால், கேமிரா பொருத்தப்பட்டிருக்கும்.
கேமிரா பதிவுகளைப் பார்க்க, அந்த அறையின் வெளியே ( நுழைவு வாயில் அருகே) எல்.ஈ.டி. திரை வைக்கப்பட்டிருக்கும்.
பயணிகள், தங்கள் டிக்கெட் உள்ளிட்ட ஆதாரங்களை கேமிரா முன்பு நீட்ட வேண்டும். அதனை கேமிரா படம் பிடிக்கும்.
இந்த விவரங்களை தங்கள் அறைகளில் உள்ள திரையில் பார்க்கும் ஊழியர்கள், ஓ.கே.சொல்லி, அனுமதி கொடுத்ததும், பயணிகள், ’டெர்மினல்’ சென்று விடலாம்.
முன்பு போல் தொடுதல் போன்ற அசவுகரியங்கள், பயணிகளுக்கு இருக்காது.
இதுபோல் இன்னும் சில வசதிகளைப் பயணிகளுக்குச் செய்து கொடுக்கவும் விமான போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
– ஏழுமலை வெங்கடேசன்