ண்டன்

கொரோனா நோயாளிகளை நாய்களின் மோப்ப சக்தி மூலம் கண்டுபிடிக்கும் புது முயற்சியை பிரிட்டன் தன்னார்வு குழுவினர் தொடங்கி உள்ளனர்.

உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த பாதிப்பைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன.  இவற்றின் மூலம் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்தப் பட்டு வருகின்றனர்.    இந்நிலையில் கொரோனா நோயாளிகளை நாய்களின் மோப்ப சக்தி மூலம் கண்டு பிடிக்க முடியும் என பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தன்னார்வ குழுவினர் கூறி உள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பிரிட்டனில் உள்ள மில்டன் நகரில் மெடிகல் டிடக்‌ஷன் டாக் என ஒரு விலங்குப் பிரிவு உண்டாக்கப்பட்டது.  இதன் முக்கிய நோக்கம் நோயாளிகள் உடலின் வாசத்தை வைத்து பாதிக்கப்பட்டோரைக் கண்டறிவது ஆகும்.   இந்நகரில் உள்ள ஒரு நாய்கள் காப்பாத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை நாய்களின் மோப்ப சக்தி மூலம் அறிய நாய்களுக்கு பயிற்சிஅளிக்கபட்டு வருகிறது.

இந்த பயிற்சியை நடத்தும் கிளாரி கெஸ்ட், “நமது உடலை ஒவ்வொரு நோய் தாக்கும் போதும் ஒவ்வொரு விதமான வாசனைகள் வெளி வரும்  இந்த வாசத்தை அடிப்படையாக வைத்து  அதே வாசம் வரும மற்ற நபர்களை நாய்கள் தனது மோப்ப சக்தியால் கண்டறிய முடியும்.   ஏற்கனவே புற்றுநோய், பார்க்கின்ஸன் நோய்,  பாக்டீரியா தொற்று போன்றவற்றை நாய்கள் மூலம் கண்டுபிடித்துள்ளோம்.

இதற்காக நாய்களுக்கு 6 வாரப் பயிற்சியைத் தொடங்கி உள்ளோம்  இந்த பயிற்சி வெற்றிகரமாக முடிந்தால் நாய்கள் மூலம் பாதிக்கப்படோரி கண்டறிந்து அவர்களை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி தொற்றை உறுதிப் படுத்த முடியும்.  சில மணி நேரத்தில் ஒரு நோய் நூற்றுக் கணக்கானோரைக் கண்டுபிடித்து விடும். எதிர்காலத்தில் இந்த நாய்களை விமான நிலையங்களில் பயன்படுத்தினால் மிக விரைவாக சோதனை முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.