சென்னை
தமிழக அரசு நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயக்கம் குறித்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதை பற்றி ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியில் நாம் தமிழக அரசு அளித்துள்ள விதிகள் பற்றிய முழு விவரத்தை காண்போம்.
தமிழக அர்சு வெளியிட்டுள்ள ஊரடங்கு குறித்த அறிக்கையில் ஊரடங்கு வரும் 30.06.2020 வரை நீட்ட்ப்பட்டுவதாக அறிவித்து அதற்கான விதிகளை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் காணப்படுவதாவது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடைகளில் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து கீழ்க்கண்ட தடைக்ள் அமலில் இருக்கும்
- வழிபாடு தலங்களில், வழிபாடு மற்றும் மதம் தொடர்பான கூட்டங்கள்
- நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா
- தங்கும் வசதியுடன் உள்ள ஓட்டல்கள், உல்லாச விடுதிகள், ஆகியவற்றுக்குத் தடை உள்ள போதிலும் மருத்துவத்துறை,காவல்துறை, அரசு அலுவலர், வெளி மாநிலத்தவர், தனிமப் படுத்தப்பட்டோருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது
- வணிக வளாகங்கள் இயங்கக்கூடாது.
- மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் இயங்க தடை
- திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிர்காட்சி சாலை, அருங்காட்சியகம் ஆகியவை போன்றவற்றுக்குத் தடை
- மாநிலங்களுக்கு இடையே பேருந்து இயக்க தடை
இதில் தொற்றின் தன்மைக்கேற்றபடி படிப்படியாகத் தளர்வு அளிக்கப்பட உள்ளது. மேலும் இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேலும் திருமணங்களுக்கு 50 பேருக்கு மேலும் அனுமதி கிடையாது.
நாளை முதல் பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்த 8 மண்டலங்களாக மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.
- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், மற்றும் நாமக்கல்
- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி,
- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மற்றும் கள்ளக்குறிச்சி
- நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம்
- தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்யாகுமரி, மற்றும் தென்காசி
- காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு
- சென்னை காவல் எல்லையில் வரும் பகுதிகள்
இவற்றில் 7 மற்றும் 8 ஆம் மண்டலத்தில் பேருந்துகள் இயக்கப்பட மாட்டது. மற்ற மண்டலங்களில் 50% பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இங்கு தனியார் பேருந்துகளும் இயங்கலாம். பேருந்துகளில் மொத்த இருக்கைகளில் 60% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து செல்லலாம். இந்த மண்டலங்களுக்குள் பயணிக்கும் பய்னிகளுக்கு இ பாஸ் தேவை இல்லை
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஜூன் 1 முதல் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
- ஐடி மற்றும் ஐடி சம்பந்தப்பட்ட சேவை நிறுவனங்களில் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் பயணம் செய்து 20% பணியாளர்கள் பணி செய்யலாம் அதிக பட்சம் 40 பேருக்கு அனுமதி உண்டு.
- தனியார் நிறுவனங்கள் 50% பணியாட்களுடன் பணி புரியலாம். கூடியவரை வீட்டில் இருந்து பணியாளர்கள் பணி புரிவதைத் தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
- மால்களை தவிர மற்ற அனைத்து பெரிய கடைகளும் 50% ஊழியர்களுடன் செயல்படலாம். கடைக்குள் ஒரே நேரத்தில் அதிக பட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்கலாம். சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும். குளிர்சாதன வசதிகளை இயக்கக்கூடாது.
- உணவகங்களில் 8 ஆம் தேதி முதல் மொத்த இருக்கைகளில் 50% இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது குளிர்சாதனம் இயக்கப்படக் கூடாது.
- 7.6.20 வரை டீக்கடைகள், மற்றும் வரை உணவகங்களில் பார்சல் பிரிவு மட்டும், மற்றும் காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி
- 8 ஆம் தேதி முதல் தேநீர்க்கடைகளிலும் 50% பேர் அமர்ந்து டீ அருந்தலாம்
- டாக்சிகள் மற்றும் கேப்கல் ஓட்டுநர் இல்லாமல் 3 பயணிகளுடன் மண்டலத்துக்குள் இ பாஸ் இன்றி இயங்கலாம்
- ஆட்டோக்களில் ஓட்டுநரைத் தவிர்த்து இருவருக்கு அனுமதி
- சைக்கிள் ரிக்ஷாவுக்கு அனுமதி
- முடி திருத்தகம், அழகுநிலையங்கள் ஆகியவை குளிர் சாதனம் இல்லாமல் இயங்க அனுமதி.
சென்னை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடு பகுதி தவிர மீதமுள்ள பகுதிகளில் அனுமதி விவரங்கள்
- தொழில் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
- ஐடி மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயக்கனௌமதி. ஆயினும் குறைந்தது 20% பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய விரும்பினால் அனுமதிக்கலாம்.
- மால்கள் தவிர மற்ற அனைத்து பெரிய கடைகள், 50% ஊழியர்களுடனும் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்களுடனும் குளிர்சாதன வசதி இன்றி இயங்கலாம்
- டீக்கடைகள் மற்றும் உணவு விடுதிகளுக்கு மேலே குறிப்பிட்ட அதே உத்தரவு பொருந்தும். இதே முறை டாக்சி, கேப், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாவுக்கு பொருந்தும்
- அனைத்து பொது இடங்களிலும் 5பேருக்கு மேல் கூட கூடாது.
- கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு விதிகள் முழுமையாகத் தளர்வின்றி கடைப்பிடிக்கப்படும்.
என அறிவிக்கப்பட்டுள்ளது.