லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா, ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார் நயன்தாரா .
கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்கள் எல்லாம் மாதக் கணக்கில் மூடப்பட்டுள்ளதால் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனித்திருந்தார்.
இந்நிலையில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை தடை செய்யக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையிடம் சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் புகார் மனு வழங்கியுள்ளனர். சிறுபான்மை மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் மூக்குத்தி அம்மன் படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.