மும்பை: இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த வீரர் விருதைப் பெற்றுள்ளார்.
ஹாக்கிப் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு, சர்வதேச க்கி கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கி கவுரவம் செய்யப்படும். வளரும் வீரர்களுக்கான ‘ரைஸிங் ஸ்டார்’ என்ற விருது இந்திய அணியின் விவேக் சாகர் பிரசாத் மற்றும் லால்ரெம்ஸியாமி ஆகியோர் தேர்வாகினர்.
இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங், சிறந்த வீரருக்கான விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார். இதற்காக பதிவான வாக்குகளில் மொத்தமாக 35.2% வாக்குகளை இவர் பெற்றார். இவர், பெல்ஜியம் மற்றும் அர்ஜெண்டினா வீரர்களை விஞ்சி முதலிடம் பெற்றார்.
கடந்த 2011ம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கிய மன்பிரீத் சிங் இதுவரை 260 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தலைமையில் இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளது.
தனக்கு கிடைத்த விருதை சக வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார் மன்பிரீத் சிங். மேலும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.