மதுரை:
3000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இந்த விவகாரம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுஉள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து புதிய அறிவிப்பை கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

இதனால், பழைய நியமனங்கள் அனைத்தும் ரத்தானது என்று பள்ளிக்கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது.