டெல்லி:
கொரோனா நோயாளிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது.  நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  6,25,544 ஆக உயர்ந்துள்ளது.  பலியானோர் எண்ணிக்கை 18,213 ஆக உயர்ந்துள்ளது. 2,27,439 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கொரோனா  அறிகுறி இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தலாம் என்றும்  அறிகுறி இல்லாதவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது.

[youtube-feed feed=1]