ண்டிகர்

ரும் 17 ஆம் தேதி அன்று அரியானாவில் புதிய அரசு பங்கேற்க உள்ளது.

சமீபத்தில் அரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது. அக்கட்சி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்த கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றிகாங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. மேலும் 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

அரியானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு புதிய அரசை அமைப்பதற்கான ஏற்பாடுகளை பாஜக தொடங்கியது. முதல்வர் நயாப் சிங் சைனி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்பு குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.

நயாப் சிங் சைனி தலைமையிலான புதிய அரசு வருகிற 17-ந் தேதி பதவியறே்கும் என பாஜக அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான மனோகர் லால் கட்டார் பிரதமர் மோடியின் ஒப்புதல் கிடைத்திருப்பதாகவும், பஞ்ச்குலாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அரசு பதவியேற்கும் என்றும் கூறியுள்ளார்.

அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அரியானா மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வராஅக நயாப் சிங் சைனி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.