தூத்துக்குடி:  திருச்சி விமான நிலையங்களுக்கு விமான சேவை வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய துறைமுகம் என்றால் அது தூத்துக்குடி துறைமுகம். இதையொட்டி,  தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.  மேலும் பல புதிய தொழில் நிறுவனங்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள்  உருவாகி வருகிறது.  இதன் காரணமாக தூத்துக்குடி நகரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

அதிகமான மக்கள் விமான பயணத்தை விரும்புவதால்,  சமீப காலமாக தூத்துக்குடி விமான நிலையமும் பிரபலமாகி வருகிறது. தினசரி நூற்றுக்கணக்கானோர் விமானங்கள் மூலம்  தூத்துக்குடி வந்து செல்கின்றனர்.  தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடியும் போது பெரிய விமானங்கள்  மற்றும் சரங்கு விமானங்கள் எளிதாக வந்து தரையிறங்க முடியும்.

தற்போதைய நிலையில்,  சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு, இரு வழித்தடங்களில் நாள்தோறும் 8 விமான சேவைகளும், திருச்சிக்கு 14 விமான சேவைகளும் இயக்கப்படுகிறது.  அதுபோல பெங்களூருக்கும் விமான சேவைகள் உள்ளது.

இந்த நிலையில், சென்னை – தூத்துக்குடி இடையே 12 சேவையாகவும், சென்னை – திருச்சி இடையே 22 சேவையாகவும் அதிகரிக்க ஒப்புதல் மத்திய விமான இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து,  தூத்துக்குடியில் இருந்து திருச்சிக்கு விமான சேவை அதிகரிக்கப்பட உள்ளது. இந்த புதிய சேவை  மார்ச் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,  தூத்துக்குடி விமான நிலையத்தில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.