பீஜிங்
தடுப்பூசி இல்லாமலே கொரோனா பரவலை நிறுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளதாகச் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால் உலகெங்கும் 49.88 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கபட்டுள்ளன்ர். கிட்டத்தட்ட 3.25 லட்சம் பேர் இந்த வைரசுக்குப் பலியாகி உள்ளனர். இந்த கொரோனா தொற்றைத் தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை. எனவே சமூக இடைவெளி, தனிமைப்படுத்தல், ஊரடங்கு போன்றவை மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் கொரோனா முழுமையாக் கட்டுப்படுத்தப்படவில்லை.
கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இன்னும் பரிசோதனையில் முழு வெற்றி அடையாத நிலை உள்ளது. இந்நிலையில் சீனாவின் விஞ்ஞாஇகல் ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த மருந்தை சீனாவின் புகழ்பெற்ற பேகிங் பலகலைக்கழக விஞ்ஞானிகள் விலக்குகளிடம் பரிசோதனை செய்துள்ளன்ர்.
பலகலைக்கழக இயக்குநர் சன்னி ஜி, அந்த மருந்து தடுப்பூசி இல்லாமலே கொரோனா பரவலைத் தடுப்பதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்டோரும் இந்த மருந்தின் மூலம் வெகு சீக்கிரம் தாக்கத்தில் இருந்து விடுபட்டு விடுவதாகவும் தெரீவ்த்துள்ளர். இந்த பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட சுண்டெலிக்கு மருந்தைச் செலுத்திய பிறகு வைரசின் தாக்கம் 2500 விகித அளவு குறைந்துள்ளது என கூறப்படுகிறது.
இந்த மருந்தை இன்னும் மனிதர்களிடம் பரிசோதனை செய்யவில்லை எனவும் சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இந்த மனித சோதனையை ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நடத்த உத்தேசித்துள்ளதாக ஜி தெரிவித்துள்ளார். இந்த மருந்து பரிசோதனை விரைவில் முடிந்து விடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் உலக சுகாதார மையம் தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என கூறி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.