பழனி: பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக, திமுக இரு கட்சிகளும் தேர்தல் களத்தில் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றன.
இந் நிலையில், பழனியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். கடவுளே இல்லை என கூறி வந்த திமுகவினர் தற்போது கையில் வேல் பிடித்து உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தல் உடன் திமுகவின் சகாப்தம் முடிவடையும் என்று தெரிவித்தார்.
கடந்த 21ம் தேதி ஆரணியில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் ஆரணியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.