சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சொரோபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்தபோது கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2005ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி, இந்த வழக்கின் அதிக முக்கிய நாள். அன்றுதான், கேங்ஸ்டர் என்று சொல்லப்படும், சொராபுதீன் ஷேக் அவர் மனைவி கவுசர் பீ, கூட்டாளி துளசிராம் பிராஜபதி ஆகியோர் குஜராத் போலீசாரால் ‘கடத்தப்பட்டார்கள்’. அவர்கள் ஹைதராபாத்திலிருந்து பேருந்து மூலம், மகாராஷ்டிராவின் சாங்கிலி நகருக்கு சென்றபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவின் உத்தரவின் பேரில் போலி என்கவுண்டர் நடத்தப்பட்டதாக குற்ம் சாட்டப்பட்டது. இநத விவகாரத்தில் பல அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், சிபிஐ தரப்பில் இருந்து டிஐஜி கந்தசாமி, வழக்கை விசாரித்து, அமித்ஷாவை கைது செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில், 13 வருடங்கள் கழித்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில், மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட 22 பேருமே விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை என்பது இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அமித்ஷாவை கைது செய்த தைரியமான காவல்அதிகாரியான கந்தசாமியை தமிழகஅரசு லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக நியமித்து உள்ளது.