தூத்துக்குடி

ரக்கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் காபர் சிக்கியது குறித்து புதிய தகவல்கள் வந்துள்ளன.

தூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ஆம் தேதி கற்களை ஏற்றிச் சென்ற இழுவைக் கப்பலில் 9 பணியாளர்கள் சென்றுள்ளனர்.   மாலத்தீவில் கற்களை இறக்கி வைத்து விட்டு இந்தக் கப்பல் தூத்துக்குடிக்குத் திரும்பி நேற்று தூத்துக்குடி வந்துள்ளது.   இதில் மாலத்தீவின் துணை அதிபர் அகமது அதீப் காபர் தப்பி வருவதாக ரகசியத் தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளது.

அகமது அதீப் காபர் முன்னாள் அதிபர் யாமின் கியுமை கொல்ல முயன்றதாக போடப்பட்ட வழக்கில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.  அவர் கடந்த 4 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துள்ளார்.   அவர் தப்பி இந்தியாவுக்கு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

அதையொட்டி காவல்துறையினர் துறைமுகம் வரும் முன்பே  கப்பலைச் சோதனை இட்டுள்ளனர்.   ஆனால் அப்போது அவர் கப்பலின் ரகசிய அறையில் ஒளிந்துக் கொண்டுள்ளார்.  அதனால் காவல்துறையினர் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

அதன் பிறகு கப்பல் துறைமுகத்தில் நுழையும் போது குடியேற்ற அதிகாரிகள் கப்பலைச் சோதனை இட்டுள்ளனர்.  அப்போது அதிகமாக இருந்த ஒருவரைக் கண்டு விசாரித்த போது அவர் முன்னாள் துணை அதிபர் எனக் கண்டறிந்து கைது செய்யப்பட்டுள்ளார்