சென்னை: வங்கக்கடலில் வரும் 23ம் தேதி வங்கக்கடலில் புதிய தாழ்வழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன் காரணமாக, சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, திருச்சி, நெல்லை, தென்காசி என பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டியது. மழை எதிரொலியாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பின.
தென் தமிழகத்தில் ஒரே நாளில் 3 அணைகள் கொள்ளளவை எட்ட உபரி நீர் திறந்துவிடப்பட்டது. அதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய தாழ்வழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாக இருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும். வங்கக்கடலில் தென்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.