சென்னை: முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டு வருகிறது. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
தமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள முல்லைப் பெரியாறு அணையின் தரம் காலாவதியாகி விட்டது என்றும் இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் கேரள அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அதனால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கவும் மறுத்து வருகிறது. இதற்கிடையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடி வரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதுடன் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
அதன்பேரில் உச்சநீதிமன்றம் வல்லுநர் குழுவை அமைத்து, அணையை ஆய்வு செய்து, அணை திடகாத்திரமாக இருப்பதாக அறிக்கை அளித்தது. அதன்பேரில், எ முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கேரள அரசு உசசநீதிமன்ற உத்தரவை இன்றுவரை மதிக்காமல் 136 அடி முதல் 138 அடி வரை மட்டுமே சேமிக்கிறது. அதற்கு மேல் வரும் தண்ணீரை வெளியேற்றி வருகிறது. இதற்கு காரணமாக அணை பலகீனமாக இருப்பதாக கூறி வருகிறது. இதனால் அணையின் நீரை நம்பி உள்ள தென்மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் தமிழக விவசாயிகளை கண்டுகொள்ள பினராயிவிஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு, க முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று பிடிவாதமாக கூறி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற காவிரி மேலாண்மைஆணைய கூட்டத்திலும், இதை வலியுறுத்தி உள்ளது. கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கேரள அரசின் நடவடிக்கை தடுக்க வேண்டும் என மத்திய அரசுக்குகடிதம் எழுதி உள்ளது.
மேலும் உடனடியாக முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதில் அணை குறித்து ஏற்கனவே வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித் திருந்த உத்தரவில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களுக்கும் தனித்தனியாக புதிய சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
இதில் இரு மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து அணை பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் செயல்பட வேண்டும். மத்திய அரசு அமைக்கும் குழுவில் இரு மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும். இயற்கை பேரிடர் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக முன் எச்சரிக்கை நடவடிக்கை களை இந்த சிறப்பு குழு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதில் அணை முழு பாதுகாப்போடு இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டியது அவசியம் இல்லை என்று தெளிவாக தெரிவித்து இருந்தது.
மத்திய அரசு, கேரளா அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2019 ஜனவரி 4-ந்தேதி தொடர்ந்த நீதி மன்ற அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதையும் படியுங்கள்: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் சிறப்பு மலர் அலங்காரம் இது போன்ற சூழலில் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளா அரசு தரப்பில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் கொடுத்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 28-ந்தேதி நடக்க இருக்கும் மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாக, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மேற்பார்வை குழுவின் முடிவே இறுதியானது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. அதே போன்று தமிழ்நாடு அரசு சம்மதம் இருந்தால் மட்டுமே முல்லைப் பெரியாறின் கீழே புதிய அணை கட்ட முடியும் என்றும், இல்லையேல் சாத்தியமே கிடையாது எனவும் மத்திய அரசு மாநிலங்களவையில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இவை அனைத்தையும் மீறும் விதமாக முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக வரும் 28-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகள் அனைத்தையும் மீறும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆரம்பத்திலேயே கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவில் கேரள அரசின் பரிந்துரையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்திடம் தமிழக அரசு முறையிடுகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் விரிவான ஆட்சேபனை கடிதம் தயார் செய்யப்பட்டு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர் வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் உயர் அதிகாரிகள் இன்று மாலை 5 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பும் கடிதத்தில் வேறு என்னென்ன விவசயங்களை குறிப்பிடுவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.