கொச்சி:
கேரளத்தில் புதிதாக 23,513 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்தது:

“மாநிலத்தில் புதிதாக 23,513 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 28,100 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 198 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,41,759 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கேரளத்தில் மொத்த பலி எண்ணிக்கை 8,456 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 2,33,034 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் ஜூன் 9 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.