சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர். சென்னையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி தோல்வி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது.
இதையடுத்து, ,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர். அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நாளை மறுதினம் (மார்ச்.4 ஆம் தேதி) நடைபெற உள்ளது.
[youtube-feed feed=1]