ராஜா

 

 

 

திண்டுக்கல்:

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா முகநூலில் ஒரு கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில்,  ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவே ராமசாமி சிலை’ என பதிவிட்டிருந்தார்.

அவரது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது கருத்தை நீக்கியதுடன், வருத்தமும் தெரிவித்தார். எனினும், எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின.

இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் வந்த எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதுதான் திராவிடம் என்று கூறினார்.

மேலும், “தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார். அதை நான் சொல்வதால்தான் என்னை பெரியாரிஸ்டுகள் எதிர்க்கிறார்கள்” என்றார்.

தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று ஈ.வே.ரா பெரியார் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் வசை பாடுகிறார்கள் என்றும் எச்.ராஜா கூறினார்.