டில்லி,

மேகாலயாவில் 5 காங்.எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், புதிய காங்கிரஸ் தலைவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமனம் செய்துள்ளார்.

 

மேகாலயாவில் முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவருக்கு  எதிர்ப்பு தெரிவித்து,  5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை  ராஜினாமா செய்தனர். மேலும் 3 எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகினர்.

இவர்கள் 8 பேரும் பாரதியஜனதா கூட்டணி கட்சியில் ஐக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், மேகாலயா மாநில காங்கிரஸ் தலைவர் லபாங்கை நீக்கி, அவருக்கு பதிலாக புதிய மாநில தலைவராக  செலஸ்டின் லின்டாங் என்பவரை நியமித்துள்ளார்.

இவர்  மேகாலயா காங்கிரஸ் அமைச்சரவையில் மந்திரியாக இருக்கிறார்.ர்.

மேகாலயாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது  5 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.