சென்னை; சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. விதிகளை மீறி செயல்படும் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும், ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள்,. ஸ்பா போன்றவைகள் செயல்பட லைசென்ஸ் பெறுவதற்கு புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி,
கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது.
அவை செயல்படும் நேரத்திலும் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும்.
உட்புறம் மற்றும் நுழைவு பகுதிகளில் CCTV (கண்காணிப்பு )கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக் கூடாது.
வாடிக்கையாளர்களுக்கு என தனி வருகை பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும்.
எந்த வகையிலும் பாலியல் தொழில் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கு தடை.
நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது.
பக்க விளைவுகள் ஏற்படுத்த கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது.
காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார்கள் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு மேற்கொள்வார்கள். பாலியல் சேவைகள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..
ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர் பணியாளர் தனது கையினை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்தவருக்கு சேவை வழங்கவேண்டும்.
ஒருவருக்கு சேவை வழங்கிய பின் அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன் கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
உரிமம் விண்ணப்பிக்கும் நபர் உரிய படிப்பு படித்திருக்க வேண்டும்.
விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்”
இவ்வாறு பல்வேறு நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.