சென்னை
சென்னையில் புதியதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய முனையம் ஊனமுற்றோருக்கு உதவும் வகையில் அமைய உள்ளது.
சென்னையில் தற்போதுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் கடந்த 2013 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதில் உள்ள கழிப்பறைகள், லிஃப்டுகள் மற்றும் போர்டிங் வாசல்கள் ஆகியவை ஊனமுற்றோருக்கு வசதியுடன் இல்லை. மொத்தத்தில் இந்த கட்டிடம் ஊனமுற்றோர் பயன்படுத்த மிகவும் சிரமமான இடமாக இருந்து வருகிறது. தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் ஜூலை மாதத்தில் இருந்து இந்த முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த முனையம் அமைக்கப்பட்டால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு மிகவும் சவுகரியமாக அமையும் என கூறப்படுகிறது. இந்த புதிய கட்டிடம் இன்னும் மூன்று வருடங்களுக்குள் முடிவடைய உள்ளது. இந்த புதிய கட்டுமானத்தினால் பயணிகள் விமான ஏற வண்டிகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
தற்போது கட்டப்பட்டு வரும் முனையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு குறிப்பாக ஊனமுற்றோருக்கு பல சவுகரியங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்டு வரும் கழிப்பறை, லிஃப்டுகள் மற்றும் போர்டிங் வாசல்கள் ஆகியவை ஊனமுற்றோருக்கும் சிரமமின்றி இருக்கும் வகையில் அமைக்க்கபப்ட்டு வ்ருகின்றன. அத்துடன் இங்கு பணி புரியும் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ஊனமுற்றோருக்கு உதவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.