லண்டன்:

கல்லீரல் பாதிப்பை விரைந்து அறியும் புதிய ரத்த பரிசோதனை முறையை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கல்லீரல் பாதிப்பை விரைந்து கண்டுபிடிக்கும் தேவையை நிறைவேற்றும் வகையில் பிரிட்டனின் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் புதிய ரத்த பரிசோதனை முறையை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு அட்வாண்ஸ்டு மெட்டீரியல் மருத்துவ இதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் லிவர் ஃபைப்ரோஸிஸ் என்ற கல்லீரலில் ஏற்படும் ஆரம்ப கட்ட பாதிப்பை அறிய முடியும். இந்த பாதிப்பை பரிசோதனையில் கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டால் கல்லீரல் வீக்கம் போன்ற நோய் ஏற்பட்டுவிடும். இதை 30 முதல் 45 நிமிடத்தில் ரத்த பரிசோதனை மூலம் அறிந்து விடலாம்.

இந்த பரிசோதனைக்கான கட்டணம் குறைவு. அதோடு முடிவை விரைந்தும், வலுவான முறையிலும் அறிந்துவிடலாம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.