சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய உள்ளதால், தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களில் 25ஆம் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு அடுத்தடுத்து உருவாகி வருவதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், லதென்மேற்கு வங்கக் கடல் பகுதியில்அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் இதன்  காரணமாக தமிழகத்தில் வருகின்ற 25,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த மாதத்தில் உருவாகும் 3 வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.