டில்லி
குறிப்பிட்ட நபருக்கு கொரோனா தடுப்பூசி பொடபட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இதுவரை 72 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கான ஆதாரத்தை கோவின் இணைய தளம் டிஜிடல் சான்றிதழ்களாக வழங்கி உள்ளது.
தடுப்பூசி சான்றிதழை ஸ்மார்ட் போன்கள்:, டேப்லட், லாப்டாப் மற்றும் டிஜி லாக்கரில் சேமிக்க முடியும். இவற்றை தேவைப்படும் போது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரமாகக் காட்ட முடியும். இதை பொதுமக்கள் மால்கள், அலுவலகங்கள், பொது நிகழ்வுகள் ஆகியவற்றுக்குச் செல்லும் போது காட்ட முடியும்.
அதே வேளையில் ரயில்வே, விமானம் மற்றும் விடுதிகளில் முன்பதிவு செய்வோர் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என அறிய விரும்பலாம். இதற்காகக் கோவின் ஒரு புதிய செயலியை உருவாககி உள்ளது. இந்த செயலியில் விவரம் அறிய வேண்டியவரின் பெயர் மற்றும், தொலைப்பேசி எண்ணை டைப் செய்தால் ஓ டி பி வரும்
அதை டைப் செய்தபிறகு 0 என வந்தால் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனப் பொருளாகும் இதற்கு மாறாக 1 என எண் வந்தால் அவர் ஒரு டோஸ் போட்டுக் கொண்டவர் எனவும் 2 என வந்தால் அவர் இரண்டு டோஸும் போட்டுக் கொண்டுள்ளார். என்பதும் பொருளாகும்.